2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று (17.02.2026) காலை 09:30 மணிக்கு கூடியது. அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து வேளாண் இடைக்கால பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அறையில் அவரது தலைமையில் அனைத்து கட்சித் தலைவர்களுடன் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

Advertisment

இந்த கூட்டத்தில் கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்த வேண்டும் என முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், “18 மற்றும் 19ஆம் தேதி என இரு நாட்கள் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவதாம் நடைபெறும். இந்த இரு நாட்களும் காலை கேள்வி பதிலுக்கான வினா விடைகள் நேரம் நடைபெறும். இதனையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுவார். வரும் 20ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம்  சட்டப் பேரவையில் இன்று (18.02.2026) தொடங்குகிறது. அதன்படி இன்றும், நாளையும் (19.02.2026) என இரு நாட்கள் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது. இதனையடுத்து நாளை மறுநாள் (20.02.2026) பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிக்க உள்ளார். அதோடு கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை அவர் தாக்கல் செய்ய உள்ளார். அதன் பின்னர் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.