அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மாதாந்திர உதவி தொகையை, ஆந்திரா, பாண்டிச்சேரி அரசு வழங்குவது போல் பாதிப்பின் அடிப்படையில் 6 ஆயிரம், 10 ஆயிரம், 15 ஆயிரம் என உயர்த்தி வழங்க கோரி கடந்த 2024 ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகள் போராடி வருகின்றனர்.
ஆனால் இதுவரை அரசு இதனை நிறைவேற்றாததால், தமிழக அரசை கண்டித்தும், உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரியும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இன்று (11-02-26) இரண்டாவது நாளாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சுமார் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/11/arrest-2026-02-11-17-52-41.jpg)