விருதுநகர் அருகே மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தன்னுடைய மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரை சேர்ந்தவர் ராஜவல்லி (55) வயது மாற்றுத்திறனாளி. இவருக்கு மாரியம்மாள் (30), முத்துப்பேச்சி (26) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மூவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மூவரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/20/a4943-2025-08-20-20-00-58.jpg)