Advertisment

“பீகாரின் வெற்றிக்குக் காரணமே எஸ்.ஐ.ஆர். தான்” - திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேட்டி!

dindigul-seenivasan-pm

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையைக் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாதக, தவெக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 

Advertisment

இதற்கிடையே சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைக்குப் பின் பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே சமயம், எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் 141 தொகுதிகளில் போட்டியிட்டு 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதோடு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தது. 

Advertisment

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பீகார் இடைத் தேர்தல் (அதாவது சட்டமன்ற தேர்தல்) போன்று நூற்றுக்கு நூறு அப்படியே தமிழகத்தில் வெற்றியாக வரும். 220 இடங்களுக்கு மேல் அதிமுக கழக வெற்றி பெற்று,  நிதீஷ் குமாரைப் போல ஒப்பற்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக 2026 இல் வருவார். எஸ்.ஐ.ஆரை எதிர்க்க வேண்டிய ஒன்றுமே இல்லை. வருசா வருசம், 5 வருஷம் 10 வருஷத்துக்கு ஒரு தடவை நடக்கிறது.

nithish-modi

வாக்காளர்கள்  சேர்கிற இடத்தில் திமுக கொடிதான் போகிறது. அவர்கள் தான் எல்லா இடத்திலும் நிற்கிறார்கள். வாக்கு என்பது நம்முடைய சுதந்திரம் நம்முடைய உரிமை. இதில் எந்தவித பாதிப்பு உள்ளது. ஏன் திமுகவினர் நடுங்குகிறார்கள். புலி வாலை பிடித்துவிட்டு விட முடியாமல் தவிக்கிறார்கள். உண்மை என்ன என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். இதில் ஒன்றும் தப்பே இல்லை. பீகாரின் வெற்றிக்குக் காரணமே எஸ்.ஐ.ஆர். தான்” எனப் பேசினார். 

admk b.j.p Dindigul Srinivasan janata dal united special intensive revision
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe