கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை ஆருத்ரா தேர் திருவிழாவும், சனிக்கிழமை தரிசன விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் கோயில் கருவறையில் இருந்து தேருக்கு சாமி சிலைகளை எடுத்துச் சென்று மீண்டும் தேரில் இருந்து சிலைகளை கோயிலுக்கு எடுத்து வந்தனர். பல்லாண்டு காலமாக கோயில் வாசலான கீழ சன்னதியில் பாலசுப்ரமணியன் என்பவர் அதே பகுதியில் வசித்துக்கொண்டு பூ கடை நடத்தி வருகிறார். இவர் சாமி சிலைகள் வரும்போது தீபாராதனை காமித்து பூ தூவி வழிபடுவதை வழக்கமாக கொண்டு வருகிறார்.
இவர் தீட்சிதர் அல்லாதவர் என்பதால் அவர் தீபாரதனை மற்றும் பூக்களைத் தூவும் போது அது சிலைகள் மீது விழக்கூடாது என தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது தீ பந்தம், கையால் நெட்டி தள்ளுவது உள்ளிட்ட தாக்குதல் நடத்தி உள்ளார்கள். இதுகுறித்து அவர் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உள்ளார். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற விழாவில் கீழ சன்னதியில் சாமி சிலைகளை எடுத்து வரும்போது தீட்சிதர்கள் பிளாஸ்டிக் பேப்பரைக் கொண்டு மறைத்து எடுத்துச் சென்றனர். இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த செயல் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. கடந்த தரிசன விழாவின் போது மஞ்சள் துணி திரையிட்டு எடுத்துச் சென்றனர்.
சாமி சிலைகள் தெரியவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது பிளாஸ்டிக் பேப்பரைக் கொண்டு எடுத்துச் சென்றுள்ளனர். இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் அனைவரும் சாமி சிலைகள் வரும் போது தீபம் ஏற்றி பூ தூவி வழிபட உரிமை உள்ளது. இதனை தொடர்ந்து தீட்சிதர்கள் உள்நோக்கத்துடன் பல்வேறு வடிவங்களில் தடுப்பது தீண்டாமையின் உச்சம் என கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி ராதா என்பவர் தீட்சிதர்கள் தொடர்ந்து இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/04/cdm-plastic-paper-2026-01-04-22-44-59.jpg)
இது மன்னர்கள் கட்டிய கோயில் இந்த கோயிலை தன் சொந்த கோயிலாக நினைத்து அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர், இந்து அறநிலையத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து தீட்சிதர்கள் தரப்பில் கேட்டபோது சாமி சிலைகள் மீது விலை உயர்ந்த, விலை மதிக்க தக்க பொன், வைர நகைகள் உள்ளது. பூ தூவும் போது நகைகள் மீது பட்டு நகைகள் கீழே விழுந்து விட்டால் யார் பொறுப்பேற்பது. அதனால் தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறோம் என்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/04/cdm-plastic-paper-1-2026-01-04-22-44-25.jpg)