சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேர்த்திருவிழா; தீட்சிதர்கள் செயலால் பக்தர்கள் முகசுலிப்பு!

103

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தேர் மற்றும் தரிசன விழா மார்கழி மாதத்தில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவை காண்பதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிவ பக்தர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன தேர்த்திருவிழா ஜூலை 1ஆம் தேதி காலை தொடங்கியது. இதில் கோவில் கருவறையில் இருந்து நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் சாமி சிலைகள் தீட்சிதர்கள் தோள்களில் சுமந்தவாறு தேருக்கு எடுத்து வந்தனர். அப்போது கீழ சன்னதியில் தீட்சிதர் அல்லாத தமிழ் ஆர்வலர் பாலசுப்பிரமணியன் என்பவர் ஒவ்வொரு முறையும் சாமி சிலைகள் தேரிலிருந்து கருவறைக்கு செல்லும் போதும் கருவறையிலிருந்து தேருக்கு செல்லும் போதும் தீபாரதனை காட்டி வழிபடுவார்.  அதேபோல் அதே பகுதியில் வசிக்கும் தீட்சிதர்களும் சாமிகளுக்கு தீபாரதனை காட்டி வழிபடுவார்கள். ஆனால் தீட்சிதர் அல்லாதவர் தீபாராதனை காட்டுவதற்கு தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

102

இந்த நிலையில் ஆனி திருமஞ்சன தேர்த்திருவிழாவிற்கு ஜூலை 1 ஆம் தேதி கருவறையில் இருந்து சாமி சிலைகள் தேருக்கு வரும்போது பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் காவல் துறையின் பலத்த பாதுகாப்புடன் தீபாராதனை காட்டினார். அப்போது சாமி சிலைகளை தூக்கி வந்த தீட்சிதர்கள் பாலசுப்பிரமணியன் காட்டும்  தீபாரதனை சாமிகளுக்கு தெரியக்கூடாது என்றும் இவர் போடும் பூக்கள் சாமி சிலை மீது விழக்கூடாது என்பதற்காக தீட்சிதர்கள் சாமி சிலை அவருக்கு தெரியாத வகையில் பெரிய துணியைக் கொண்டு திரை வைத்து மறைத்தனர்.  இவரது வீட்டை கடந்து சென்ற பிறகு துணி திரையை எடுத்து விட்டனர். இதனால் அப்பகுதியில் நின்றிருந்த பொது மக்களுக்கு சாமி சரியாக தெரியாததால் முகசுலிப்பு ஏற்பட்டது.

தீட்சிதர்கள் அல்லாதோர் சாமி சிலைகளுக்கு தீபாரதனை காட்ட தொடர்ந்து தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து தீ பந்தத்தால் அவரது கடை மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்காக சிதம்பரம் காவல் நிலையத்தில் கடந்த காலங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது‌. இந்த நிலையில் இந்த தேர் திருவிழாவில் துணி திரையை வைத்து மறைத்தது தீட்சிதர் அல்லாதவர் காட்டும் தீபாராதனைக்கு தீட்சிதர்கள் மத்தியில் பாகுபாடாகவே உள்ளது என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

Chidambaram Natarajar temple Devotees
இதையும் படியுங்கள்
Subscribe