மதுரையில் பெந்தேகோஸ்தே தேவாலயங்களின் ஆயர் பேரவை சார்பில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில் திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.  அப்போது அவர் பேசுகையில், “கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் என் மேல் காட்டுகின்ற ஒரு தனி பிரியம் தனி பாசம் என்னை மிகவும் நெகிழ செய்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சராக மட்டுமல்லாமல் திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளராக பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ஏனென்றால் கிறிஸ்துவ கொள்கைகளுக்கும் திராவிட இயக்க கொள்கைகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. வேறுபாடு கிடையாது.

Advertisment

இரண்டுமே எல்லா நேரத்திலேயும் மனித நேயத்தை அன்பை சமத்துவத்தை தான் அடுத்தவர்களிடம் காட்ட வேண்டும். அடுத்தவர்களிடம் போதிக்க வேண்டும் என்று வலியுறுத்தும். மக்களுக்கான தலைவர்கள் எப்போதும் அரண்மனையில் தான் இருப்பார்கள் என்ற கருத்தை தன்னுடைய பிறப்பால் உடைத்தவர்தான்  இயேசு. சாதாரண பின்புலத்தில இருந்து வந்தால் கூட மக்கள் தலைவர்களாக உயர முடியும் என்பதை நிரூபித்து காட்டிய இயக்கம் கிறிஸ்துவை போல, இயேசுவை போல திராவிட முன்னேற்ற கழகம்; திராவிட இயக்கம். அதற்கு எடுத்துக்காட்டு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் என்று எந்த தலைவர்களை  பார்த்தாலும் அவர்கள் எல்லாம் மக்களோடு, மக்களாக வளர்ந்தவர்களாக இருப்பார்கள் அதேமாதிரி மற்றவர்கள் மேல் இரக்கம் காட்ட வேண்டும்.

Advertisment

இது சாதாரணமாக எல்லாருக்கும் இருக்க வேண்டிய மனித குணம் என்று கிறிஸ்துவம் எல்லாருக்கும் சொல்கிறது. அதைத்தான்  திராவிட இயக்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய நாட்டை ஆள்பவர்ளுக்கு இரக்க உணர்வுக்கு பதிலாக வெறுப்பு உணர்வுதான் அதிகமாக இருல்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் மீதும்,  தமிழ்நாட்டு மக்கள் மீதும் தான் உள்ளது. இந்திய ஒன்றியத்தை ஆண்டு கொண்டிருக்கக்கூடிய ஆட்சியாளர்களுக்கு, தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் ஒரு பயம் இருக்கிறது.

எங்கே எல்லா மக்களும் ஒன்றாக சேர்ந்துருவாங்களோ அதனால் தங்களுடைய அதிகாரம் எல்லாம் பறிபோயிடுமோ என்று ஒன்றிய அரசுக்கு  தமிழ்நாடு மீது பயம். மதம், மொழி சாதியின் பெயரால் வெறுப்புணர்வை வேண்டும் என்றே பரப்புகிறார்கள். எவ்வளவு முயற்சி செய்தாலும் நிச்சயமாக தமிழ்நாட்டுக்குள்ள அவர்களுடைய பிரித்தாளும் சூழ்ச்சி எந்நாளும் வெற்றி பெறாது. தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்கவே மாட்டார்கள்” எனப் பேசினார்.

Advertisment