விழுப்புரம் மாவட்டத்தில், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை திமுக சார்பில் திறக்கப்பட்டது. இந்த விழாவில் தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

அப்போது அவர், “திருப்பரங்குன்றத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒன்றிய பா.ஜ.க அரசு மதத்தை வைத்து எப்படியாவது தமிழ்நாட்டுக்குள் கால் வைத்துவிடலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள், முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். கலைஞருடைய கடைசி தொண்டன் இருக்கிற வரைக்கும், சங்கிக் கூட்டத்தை தமிழ்நாட்டுக்குள் என்றைக்கும் அனுமதிக்க மாட்டோம், தமிழக மக்களும் அதை அனுமதிக்க மாட்டார்கள்” என்று கூறினார்.

Advertisment

முன்னதாக கார்த்திகை தீபத் திருநாளான கடந்த 3ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றியதால் இந்து அமைப்பினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். இதல் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.