சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில், ‘தமிழ் பெண்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்க’ விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

அப்போது அவர், “திராவிட மாடல் அரசு என்றாலே அது பெண்களுக்கான அரசு என்று தமிழ்நாடு முழுக்க இருக்கக்கூடிய பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியமே இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு பெண்கள் பல துறைகளில் முன்னேறி வருவதையும் சாதிப்பதையும் பார்க்கும் போது இது தான் எங்கள் தமிழ்நாடு இது தான் எங்கள் தமிழ் பெண்கள் என ஒவ்வொருவரும் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். அந்த அளவுக்கு நம்முடைய மாநிலம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெண்ணுரிமையில் இந்தியாவுக்கே தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் எல்லாம் பெண்களுக்கு உரிமை தர வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்த போது உரிமை என்பதை தாண்டி அதிகாரத்தை கொடுத்திருக்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ்நாடு திராவிட மாடல் அரசு.

Advertisment

முன்னாடி எல்லாம், வெளியே போவதற்கு ஆண்களுடைய விஷயமாகவே இருந்தது. ஒரு வீட்டில் வேலை செய்பவர் என்றால் அந்த குடும்பத்துடைய ஆண்களாக மட்டுமே இருக்கும், பெண்களுக்கு வீட்டு வேலை செய்வது தான் மிக முக்கியமான வேலையாக இருக்கும். உத்யோகம் புருஷ லட்சணம் என்ற பழமொழி சொல்வார்கள். உத்யோகம் புருஷனுக்கு மட்டும் லட்சணம் கிடையாது, இன்றைக்கு உத்யோகம் பெண்களுக்கு லட்சணம் தான். அதை செய்து காட்டியது நம்முடைய திராவிட மாடல் அரசு. குடும்பத் தலைவிகளின் உழைப்பை இந்திய வரலாற்றிலேயே முதன் முதலாக அங்கீகரித்த அரசு நம்முடைய திராவிட மாடல் அரசு. நம்முடைய முதல்வர் கொண்டு வந்த அந்த முற்போக்கான திட்டத்திற்கு பெயர் தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை. அந்த திட்டத்தை இன்றைக்கு பல மாநிலங்கள் செய்து கொண்டு வருகிறார்கள்” என்று பேசினார்.