கடலூர் மாவட்டத்தில் கடலூர் சிப்காட், நெய்வேலி என்எல்சி சுரங்கம், அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் தொழிற்சாலைகள், உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரு வேதியியல் சார்ந்த தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் ஐடிஐ படிப்பு முடித்துவிட்டு பணியில் உள்ள தொழிலாளர்கள் மேற்படிப்புக்காக இவர்கள் கெமிக்கல் சார்ந்த டிப்ளமோ கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி ஆகிய கல்வியைக் கற்க வேண்டும் என்றால் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களுக்குச் சென்று பயிலக்கூடிய சூழ்நிலை உள்ளது.
அப்படி இவர்கள் கல்வி கற்கச் செல்லும்போது பணி செய்யும் தொழிற்சாலைகளில் சம்பளம் இல்லாமல் விடுமுறை எடுத்துக்கொண்டு அதிக செலவு செய்து தங்கிப் படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பெரும்பாலும் வெகு தொலைவில் உள்ள மாவட்டங்களில் இருந்து ஏழை மாணவர்கள் அடிமட்ட தொழிலாளர்கள் இந்த கல்வியைக் கற்க முடியாத சூழல் இருந்து வருகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்களும் தொலைதூரத்தில் இந்த வகுப்புகள் நடைபெறுவதால் அவர்கள் பெருநகரங்களுக்குச் சென்று கல்வி கற்க மிகவும் சிரமம் அடைகின்றனர். டிப்ளமோ கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி வகுப்புகளைக் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் கூடுதல் வகுப்புகளாகத் தொடங்கினால் கடலூர், அரியலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் இந்த வகுப்புகளைப் படிப்பதற்கு வசதியாக இருக்கும்.
மேலும் தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த வகுப்புகளை இங்குள்ள தொழில் நுட்பக் கல்லூரிகளில் தொடங்கினால் எளிய மாணவர்களும் சொந்த ஊரிலேயே கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி படிப்பதற்கான வசதியாக இருக்கும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் கடைநிலை தொழிலாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தொழிற்சாலைகள் நிறைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் டிப்ளமோ கெமிக்கல் மற்றும் பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி வகுப்புகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/22/college-student-ai-tn-2026-01-22-23-30-22.jpg)