திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நுகர்பொருள் வாணிப கிடங்கு அலுவலகத்தின் முன்பு டி.என்.சி.எஸ்.சி சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் வழக்கறிஞர் வீரராகவன் தலைமையில் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாநில பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தரையில் முட்டி போட்டு கொண்டு நூதன முறையில் கோரிக்கை முன்னிறுத்தி போராட்டம் மேற்கொண்டனர்.
அப்போது இவர்கள் கோரிக்கையில் முன்னிறுத்தியதாவது ”சங்க அங்கீகார தேர்தலை நடத்த 2019-ல் உயர்நீதிமன்றம் உத்தரவு இருந்தும் நடத்தாமல் உள்ள சங்க அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும். 2018-ல் கேட்ட வருகை பதிவேட்டில் பெயர் இல்லாமல் சுமை பணி செய்து வரும் தொழிலாளர்களின் பெயர் சேர்க்க வேண்டும். டி.என்.சி.எஸ்.சி நிர்வாகத்தின் விதிப்படி பத்து ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு பச்சை அட்டை என்பதாகும். 2022 ஆண்டு 10 ஆண்டுகள் முடிந்து விட்டதால் 2022 ஆண்டு முன் தேதியிட்டு பச்சை அட்டை வழங்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஆதார் இணைப்பில் நிர்வாகம் செய்த தவறுகளை நிர்வாகமே சரி செய்ய வேண்டும்
12-07-2025 உடன் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலி உயர்வு தேதி முடிந்து விட்டதால் தொழிலாளர்களுக்கு 2000 முதல் 2008 வரை நிலுவையில் உள்ள 60% கூலி உயர்வையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை இவர்கள் வலியுறுத்தி நூதன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக மாநில அமைப்பு செயலாளர் திருத்தணி முனுசாமி நன்றி உரையாற்றினார்.
Follow Us