தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகச் செங்கோட்டை விளங்கி வருகிறது.  இங்கு மெட்ரோ  ரயில் நிலையத்தின் முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, நேற்று (10.11.2025) இரவு பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு முயற்சியில் ஈடுபட்டனர்.

Advertisment

இதனிடையே, கார் வெடித்துச் சிதறிய இடத்தில் இருந்த சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 9 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு என்.ஐ.ஏ, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தி தீவிர விசாரணை நடத்தினர். 

Advertisment

இந்த சம்பவத்தால் டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், அண்டை மாநிலங்களாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய அரசின் போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லியில், இந்த பயங்கர சம்பவம் நடந்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் இந்த சம்பவம்  தொடர்பாகச் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (Unlawful Activities (Prevention) Act - UAPA) டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதோடு பி.என்.எஸ். (BNS) வெடிபொருட்கள் சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 

dl-car

இந்நிலையில் இந்த கார் வெடிக்கும் போது காரில் ஓட்டுநர் மட்டுமே இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது காரில் கிடைத்த சிதைந்த உடல் பாகங்களில் இருந்து ஓட்டுநரின் டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குண்டு வெடித்த காரின் ஓட்டுநர் அடையாளம் தெரிந்துள்ளது. காரை ஓட்டிச் சென்றவர் ஓல்டு டெல்லி ரயில் நிலையத்தில் உறவினரை இறக்கிவிட்டு விட்டுக்குத் திரும்பியுள்ளார் எனவும், ஐ-20 வாகனம் பதர்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்துள்ளது என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பிற்கு அரை மணி நேரம் முன்னதாக (06.22 மணிக்கு) சுங்கச்சாவடியை கார் கடந்து சென்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. 

Advertisment

சுமார் 3 மணிநேரம் செங்கோட்டை அருகே வாகன நிறுத்துமிடத்தில் நின்றிருந்த கார், மாலை 6.48க்கு மெதுவாக இயக்கப்பட்டு சிக்னல் அருகே வந்த பிறகு வெடித்துள்ளது. இந்த காரை ஓட்டி வந்தவர் மருத்துவர் முகமது உமர் என்பவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது  ஹரியானாவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு கைதான மருத்துவர் ஷக்கீர், முகமது உமரின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஓட்டுநர் காஷ்மீரைச் சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் குடும்பத்தினரிடம் டி.என்.ஏ. மாதிரி சேகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மற்றொருபுறம் முகமது உமரின் தாய், அவரது ஆகியோர் சகோதரி காஷ்மீரில் கைது  செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.