கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான நிலையில், அந்த வழக்கை சிபிஐ விசா​ரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செய​லா​ளர் என். ஆனந்த், தேர்​தல் பிரச்​சார மேலாண்மை பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா, இணைப் பொதுச் செய​லா​ளர் சிடிஆர்​.நிர்​மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செய​லா​ளர் மதி​யழகன் மற்றும் மாவட்ட ஆட்​சி​யர் தங்​கவேல், எஸ்​.பி. ஜோஸ் தங்​கையா உள்​ளிட்ட காவல் அதி​காரி​களை டெல்லியில் ஆஜராக வைத்து சிபிஐ அதிகாரிகள் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி விசாரணை நடத்தினர்.

Advertisment

அவர்​களிடம் 3 நாட்​கள் விசா​ரணை நடத்​தப்​பட்டதை தொடர்ந்து, டெல்​லி​யில் உள்ள சிபிஐ தலை​மையகத்​தில் நாளை (12-01-26) விசாரணைக்கு ஆஜராகு​மாறு தவெக தலை​வர் விஜய்க்கு சம்​மன் அனுப்​பப்​பட்டிருந்தது. அதன்படி, நாளை சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய் டெல்லி செல்லவுள்ளார். நாளை காலை டெல்லி செல்லும் தவெக தலைவர் விஜய், நாளை மறுநாள் மாலை சென்னை திரும்பவுள்ளார்.

Advertisment

அதனை தொடர்ந்து, டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வெக சார்பில் டெல்லி காவல்துறைக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. மின்னஞ்சல் மூலமாக தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அளித்த மனுவில், சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவிருக்கும் விஜய்க்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், நாளை இரவு டெல்லியில் விஜய் தங்கும் இடத்தில் பாதுகாப்பு தேவை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லியில் தவெக தலைவர் விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, டெல்லி விமான நிலையத்தில் இருந்து விஜய் செல்லவுள்ள பகுதிகளில் முழு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல், சிபிஐ அலுவலகம் செல்லும் வழி, தங்கும் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் படை மற்றும் டெல்லி காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment