பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான ஆவணங்களை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்திற்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

Advertisment

பிரதமர் மோடியின் கல்லூரி படிப்பு, கல்வி சான்றிதழ்கள் தொடர்பான சர்ச்சை பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நீடித்து வருகிறது. அதாவது கடந்த 1978 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பும் (பி.ஏ.), டெல்லி பல்கலைக்கழகத்தில் 1983ஆம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பும் அவர் படித்தார் என்று கூறப்பட்டு வருகிறது. 

இத்தகைய சூழலில் தான் டெல்லி பல்கலைக்கழகத்தில் நீரஜ் என்பவர் 1978ஆம் ஆண்டு பி.ஏ. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பிரதமர் மோடியின் விவரங்களை கேட்டிருந்தார். இதனையடுத்து இது தொடர்பான தகவல்களை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்திற்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதே சமயம் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி டெல்லி பல்கலைக்கழகத்தின் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.