"பிராமணர்கள் தான் நமது சமூகத்தில் அறிவு தீபத்தை ஏற்றுபவர்கள். பிராமணர்கள் சாஸ்திரங்களை மட்டுமல்ல, அஸ்திரங்களையும் வணங்கினர். ஆயுதங்களும் சாஸ்திரங்களும் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும். மதத்தைப் பரப்பி, நல்ல பண்புகளை வளர்ப்பதன் மூலம், பிராமண சமூகம் எப்போதும் சமூகத்தின் நன்மைக்காகவே பாடுபட்டுள்ளது. எனவே எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பிராமண சமூகத்தின் நலனுக்காக பாடுபட வேண்டும்" என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "சாதி அமைப்பைப் போற்றுவதும், ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை உயர்த்திப் பேசுவதும் இந்த நாட்டின் சாபக்கேடான விஷயமாகும். சாதியின் பெயரால் பலர் கொல்லப்பட்ட பிறகும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அந்த சாதி அமைப்பை புகழ்ந்து பேசுவது வெறுக்கத்தக்கது. வெட்கக்கேடானது மற்றும் தேச விரோதமானது.
இதே பிளவை தான் பாஜக திட்டமிட்டு ஆழப்படுத்திக் கொண்டிருக்கிறது. ந்த அடக்குமுறையை ஒழிக்க பெரியார் வாழ்நாள் முழுக்கப் போராடினார்; சமீபத்தில், தமிழ்நாடு ஆளுநர் “தமிழ்நாடு ஏன் போராடுகிறது?” என்று கேட்டார். இந்தப் போராட்டம் நாங்கள் ஒருபோதும் நிறுத்தமாட்டோம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்"என்று பதிவிட்டுள்ளார்.