தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகச் செங்கோட்டை விளங்கி வருகிறது. இங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, கடந்த 10ஆம் தேதி (10.11.2025) மாலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு காரில் இருந்த வெடிகுண்டுகளே காரணம் என டெல்லி போலீசார் உறுதிப்படுத்தியிருந்தனர். இது குறித்து என்.ஐ.ஏ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக கடந்த 10ஆம் தேதி நண்பகலில் ஹரியானாவில் உள்ள அல் ஃபலோ என்ற மருத்துவக் கல்லூரியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினர் இனைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு ஏகே 47 துப்பாக்கியும், 8 குண்டுகள், 360 கிலோ வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதீல் அகமது ராதர், முசாமில் ஷகீல் என இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் வெடித்து சிதறிய காரை ஓட்டி வந்தவர் மருத்துவர் முகமது உமர் நபி என தகவல் வெளியாகியிருந்தது. 

Advertisment

அதன்படி, மருத்துவர் முகம்து உமர் நபியை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நியாயப்படுத்தி, உமர் நபி பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பாக இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சுமார் ஒரு நிமிடத்திற்கு மேலான கால அளவைக் கொண்டதாக உள்ளது. அதில் உமர் நபி மனித வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான தனது மனநிலை மற்றும் எண்ணங்களை அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்கொலை தாக்குதலில் ஈடுபடுவது என்பது தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்ட விஷயம் இந்த தற்கொலை தாக்குதல் சம்பவம் ஒரு தியாகம் ஆகும்”என்றும் தெரிவித்துள்ளார்.