Advertisment

தீபத் திருவிழா; பக்தர்கள் மலையேறத் தடை!

tvm-temple

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் உச்சமாக நடப்பது மகாதீபம். 2 ஆயிரத்து 666 அடி உயரமுள்ள மலை மீது அண்ணாமலையார் பாதம் உள்ள மலை உச்சிமீது மகாதீபத்தன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்படும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைமீதேறி மலை உச்சிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வருவார்கள். மலையின் அடிவாரம் முதல் உச்சிவரை காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவுப்படி சில ஆயிரம் பக்தர்களை மட்டுமே மலையேற அனுமதித்து வருகிறது காவல்துறை.

Advertisment

இந்நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டு பெருமழையால் தீபமலையில் மலைச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு வந்து சில வீடுகள் பாதிக்கப்பட்டு சிலர் இறந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது மலையின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர்களை கொண்டு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் அறிக்கையில், மலையில் மண்ணின் தன்மை இலகுவாகியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால் பக்தர்கள் மலையேறுவது பாதுகாப்பானது இல்லை என அறிவித்தது. 

Advertisment

அதனை தொடர்ந்து கடந்தாண்டு பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தினர், தீபம் ஏற்றும் குழுவினர், பாதுகாப்புக்கு போலிஸார், வனத்துறையினர் மட்டும் மலை மீதேற அனுமதிக்கப்பட்டு மலையேறிச்சென்று மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்தாண்டு பக்தர்கள் மலையேற அனுமதி இருக்கிறதா என்கிற கேள்வி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே எழுந்தது. காலநிலையை பொருத்து முடிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தற்போது மழை பெய்துவருவதால் மலையில் மண்ணின் தன்மை இன்னும் இலகுவாகியிருக்கும். 

பக்தர்கள் மலையேறிச்செல்லும் பாதை முழுவதும் சிறியது, பெரியதுமான பாறைகளால் நிரம்பியது. ஒருபாறை உருண்டால் அதன்வேகத்துக்கு பல பாறைகள் உருளும், இதனால் பக்தர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் இந்தாண்டும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புண்டு.

karthigai deepam festival temple thiruvannaamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe