திருப்பரங்குன்றம் மலை உச்சில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி. சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2வது நாளாக இன்று (15.12.2025) காலை 11:30 மணியளவில் தொடங்கிய வாதமானது மாலை 04:35 மணி அளவில் நிறைவடைந்தது. அதில் தர்கா தரப்பு மற்றும் கோவிலின் அறங்காவலர் குழு தரப்பில் வாதிடப்பட்டது.
அதன்படி கோவில் அறங்காவலர் குழு தரப்பில் ஆஜரான கோவில் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “அறங்காவலர்களை எதிர் மனுதாரராகச் சேர்க்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த உத்தரவு ஏற்புடையது அல்ல. கோவில் நிர்வாக அதிகாரியைக் காட்டிலும் அறங்காவலர் குழுதான் பழக்க வழக்கங்களை முடிவு செய்வதில் அதிகாரம் படைத்தவர்கள். இது குறித்த தீர்ப்பை ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானம் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது கோவிலின் பழக்க வழக்கங்களில் அறங்காவலர் குழுதான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் 3 நாட்களில் நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இது ஏற்புடையது அல்ல” என வாதிட்டார். அதைத் தொடர்ந்து கோவில் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “கடந்த விசாரணையின் போது மலை உச்சியில் இருப்பது ஒரு கல் தீபத்தூண் இல்லை என்று வாதிக்கப்பட்டது இன்று வாதித்த மூத்த வழக்கறிஞர் ஜோதி, “இது தீபத்தூண் அல்ல. அது சமணத்தூண் ஆகும். சமணர்கள் மதுரையில் பல மலை உச்சிகளில் வாழ்ந்துள்ளனர். அவர்கள் ஆடைகள் இன்றி மக்கள் வராத வகையில் மலை உச்சியில் வாழ்ந்து வருகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/15/judgement-2025-12-15-19-44-47.jpg)
இரவு நேரத்தில் அங்கு ஒரு விளக்கேற்றி அவர்கள், அங்குக் கூடி சில கருத்துக்களை ஆய்வு செய்வார்கள். அதற்காக உண்டாக்கப்பட்ட தூண்தான் அந்த தூண். இது தீபத்தூண் அல்ல. மேலும் இது போன்று மதுரையில் உள்ள கீழ குயில்குடி, சமணமலை, அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இது போன்ற தூண்கள் உள்ளது” என்று அது குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து மற்றொரு தர்கா தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “தர்கா தரப்பில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வீடியோ கான்ஃபரன்ஸில் ஆஜரானால் அவர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அவருக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் பதில் மனு தாக்கல் செய்ய சட்ட பூர்வமான கால அவகாசம் வழங்காமல் வாதங்களை மற்றும் வைத்துக்கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
எனவே இது ஏற்புடையது அல்ல” என்று வாதிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் ஒரு தர்கா தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதற்குத் தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில் இது போன்ற விஷயங்களைத் தீர்மானிப்பது உரிமையியல் நீதிமன்றம் தான் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போன்ற விஷயம் தான் இதற்கும் பொருந்தும். எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்படுடையதுல்ல. இந்த கோவிலில் தீபம் எங்கு ஏற்ற வேண்டும் என்பது குறித்து உரிமைகள் நீதிமன்றத்தில் தான் முடிவு செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.
Follow Us