Advertisment

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்!

02-12-2025

வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. 

Advertisment

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (02.12.2025) அதிகாலை 03.15 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதிகள் மற்றும் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா புயல்) கடந்த 6 மணிநேரமாகப் பெரிய அளவில் நகரமால் அதே இடத்தில் நீடித்தது. 

Advertisment

இது நேற்று ( 01.122025) இரவு இந்திய நேரப்படி 11.30 மணியளவில், அதே இடத்தில், சென்னைக்கு கிழக்கே சுமார் 50 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே 140 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு வட-வடகிழக்கே 160 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு  தெற்கு - தென்கிழக்கே 170 கி.மீ தொலைவிலும், (அட்சரேகை 13.0°N மற்றும் தீர்க்கரேகை 80.6°E க்குஅருகில்) மையம் கொண்டிருந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையத்திற்கும் வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளுக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் சுமார் 35 கி.மீ ஆகும். இது அடுத்த 12 மணி நேரத்தில் மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

bay of bengal north east mansoon rain weather cyclone ditwah
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe