வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. 

Advertisment

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (01.12.2025) அதிகாலை 02.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள வடதமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரையை ஒட்டிய ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, நேற்று (30.11.2025) இரவு இந்திய நேரப்படி 11.30 மணிக்கு அதே இடத்தில் (அட்சரேகை 12.3°N மற்றும் தீர்க்கரேகை 80.6°E க்கு அருகில்), சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே சுமார் 90 கி.மீ., புதுச்சேரிக்கு, கிழக்கு-தென்கிழக்கே 90 கி.மீ., கடலூருக்கு கிழக்கு - வடகிழக்கே 110 கி.மீ., காரைக்காலுக்கு வடக்கு - வடகிழக்கே 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. 

Advertisment

இந்த ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையத்திற்கும், வடதமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் சுமார் 50 கி.மீ ஆகும். இது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக வடக்கு நோக்கி நகர்ந்து, இன்று (01.12.2025)) நண்பகலுக்குள் படிப்படியாக மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளது. இந்த அமைப்பு இன்று (01.12.2025) காலைக்குள் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் 30 கி.மீ குறைந்தபட்ச தூரத்திற்குள் மையம் கொண்டிருக்கும். இந்த காரைக்கால் மற்றும் சென்னை டாப்ளர் வானிலை ரேடார்களால் (DWRs) கண்காணிக்கப்பட்டு வருகிறது.