வழக்கமாக டிசம்பர் மாதங்களில் புயல், வெள்ளம் என பாதிப்புகளைச் சந்திக்கும் மாதமாக டிசம்பர் மாதம் முந்தைய காலங்களில் இருந்துள்ளது. அண்மையில் கூட 'டிட்வா' என்ற புயல் உருவாகி இருந்தது. இன்று இந்த வருடத்தின் கடைசி நாள் என்ற நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் மட்டும் இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வெளியான அந்த அறிவிப்பின்படி சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் 6 சென்டிமீட்டர் அளவிற்கு அதிகமாக மழைப்பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்றுடன் வடகிழக்கு பருவமழைக்கான மழைப் பதிவை கணக்கிடக்கூடிய காலம் நிறைவடைகிறது. இருப்பினும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தென் மாவட்டங்களில் கடலோர மாவட்டமாக இருக்கக்கூடிய ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய சிவகங்கை மாவட்டத்திற்கும் ஓரிரு இடங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சூழலில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. சென்னையில் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)
/nakkheeran/media/media_files/2025/12/31/192-2025-12-31-14-30-53.jpg)