நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (வயது 36). இவர் வீடு கட்ட  20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் இந்த கடனை திருப்பி செலுத்த முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவிந்தராஜுக்குக் கடன் தொல்லை அதிகரித்ததுடன், கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டுள்ளனர்.

Advertisment

இதனால் மனமுடைந்த கோவிந்தராஜ் பிரக்திஷா ஸ்ரீ (வயது 9), ரித்திகா ஸ்ரீ (வயது 7) மற்றும் தேவஸ்ரீ (வயது 3) ஆகிய 3 பெண் குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துள்ளார். அதோடு கோவிந்தராஜும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். அதே சமயம அவரது மனைவி பாரதி மற்றும் மகன் அக்னீஸ்வரனை அறையில் பூட்டி வைத்துவிட்டு இந்த கொடூரச் செயலில் கோவிர்ந்தராஜ் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 மகள்களை வெட்டி கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராசிபுரம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.