ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று விவாதம்!

operalok

Debate on Operation Sindhu in Lok Sabha today

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 1 வாரமாக நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடக்காமல் முடங்கியுள்ளது.

கடந்த 1 வாரமாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று (28-07-25) நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட உள்ளது. இன்று மக்களவையிலும், நாளை (29-07-25) மாநிலங்களவையிலும் என 16 மணி நேரம் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில்,  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து கடந்த மே 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 22 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த நடவடிக்கை முழுமையான வெற்றியாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தாக்குதலை அமெரிக்கா தான் நிறுத்தியது என்றும் வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தினேன் என்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

lok sabha monsoon session PARLIAMENT SESSION Operation Sindoor
இதையும் படியுங்கள்
Subscribe