Advertisment

“உங்களுக்கு அவமானமாக இல்லையா அன்புமணி...” - தயாநிதி மாறன் எம்.பி காட்டம்!

anbudaya

Dayanidhi Maran MP’s criticize anbumani

சென்னை துரைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சர் சேகர்பார், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் இன்று அடிக்கடி நாட்டினர்.

Advertisment

அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தயாநிதி மாறன் எம்.பி, “முதல்வரின் வழிகாட்டுதலின்படி சென்னை மக்களுக்கு பல திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறோம். குறிப்பாக சேகர்பாபுவின் சொந்த தொகுதியான துறைமுகத்தில் இன்று மட்டும் ரூ.10 கோடிக்கு மேலான திட்டங்களை இன்று நாங்கள் அடிக்கல் நாட்டினோம். மக்கள் பயன்பாட்டிற்கு பெறும் வகையில் இன்று திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். தொடர்ந்து இந்த திராவிட மாடல் ஆட்சியில் சென்னைக்கு மேல் மேலும் பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். பொதுவான பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தார் என்றால் நல்ல அறிவிப்பு வரும் என்பார்கள். ஆனால், இந்த பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தால் நல்ல அறிவிப்பு வருவதில்லை, விரோத அறிவிப்பு தான் வருகிறது” என்று கூறினார்.

Advertisment

இதையடுத்து, தமிழ்நாட்டில் குற்றச் சம்பவம் அதிகரித்து வருவதாக நயினார் நாகேந்திரன் வைத்த குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவர் பாவம், அவர் ஏதோ பேச வேண்டும் என்று பேசிட்டு இருக்கிறார். பா.ஜ.க ஆளுகின்ற மாநிலத்தில் நடக்கிற குற்றச் சம்பவங்கள பற்றி பேச மாட்டார்கள். டெல்லியில் தினமும் குற்றச் சம்பவங்கள் நடக்கிறது. அதையெல்லாம் பார்த்தால் உண்மையிலேயே பயமாக இருக்கிறது. குறைகள் சொல்ல வேண்டும் என்பதற்காக அதுவும் தேர்தல் நேரத்தில் தங்களை பெரிதுபடுத்த வேண்டும் என்பதற்காக பேசுகிறார்” என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் 7 நாடுகளுக்கு வெளிநாடு பயணம் மேற்கொண்டார், ஆனால் ஒரு பைசா கூட முதலீடாக வரவில்லை என்று அன்புமணி குற்றம் சொல்லி இருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தயாநிதி மாறன், “ஏங்க முதலில் போய் அவர் அப்பாவை பார்க்க சொல்லுங்க, அவங்க அப்பாவுக்கு மரியாதை செய்ய சொல்லுங்க. என் பையன் என்னை கொலை பண்ண பார்க்கிறார் என்று அவர் அப்பா குற்றசாட்டு வைக்கிறார். இதெல்லாம், உங்களுக்கு அவமானமாக இல்லையா அன்புமணி” என்று காட்டமாக விமர்சனம் செய்தார். 

anbumani anbumani ramadoss dayanidhi maran
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe