நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. அதன்படி டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன்படி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 19 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு எக்ஸ் சமூக வலைத்தலத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 1, 2025 முதல் டிசம்பர் 19, 2025 வரை (நாடாளுமன்ற அலுவல்களின் தேவைகளுக்கு உட்பட்டு) கூட்டுவதற்கான அரசின் முன்மொழிவுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு ஆக்கபூர்வமான மற்றும் அர்த்தமுள்ள அமர்வை எதிர்நோக்குகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டும் வரும் வாக்காளர் தீவிர திருத்த முறை, பணவீக்கம், விலைவாசி உயர்வு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்குவது போன்ற பிரச்சனைகளை எழுப்பக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது.