தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, கூட்டணி குறித்து எந்தவித அறிவிப்பும் தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமதா விஜயகாந்த் அறிவிக்காமல் இருந்தார். இந்த சூழ்நிலையில், இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டனர். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததற்கு காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன.
கட்சி தொடங்கி இதுவரை திமுக கூட்டணியில் சேராத தேமுதிக, முதல் முறையாக அக்கூட்டணியில் சேர்ந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, தற்போது அந்த கட்சிகளுடன் சேராமல் திமுகவில் கூட்டணி வைத்திருப்பது அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் இடம்பெறுவார் என்று கடைசி வரை நம்பிக்கை வைத்திருந்த கூட்டணித் தலைவர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இது குறித்து பா.ஜ.க தனது அதிருப்தியை தெரிவித்தது.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் திமுக - தேமுதிக கூட்டணி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “கூட்டணி அமைப்பது அந்தந்த கட்சித் தலைவர்களின் விருப்பம்” என்று கூறிச் சென்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/19/dmdkedaps-2026-02-19-18-31-56.jpg)