Advertisment

ராமதாஸ் வீட்டின் முன்பு ஆட்டம்; மயானக் கொள்ளையில் போலீசார் தடியடி

b20

Dancing in front of Ramdas' house; Police lathicharge in graveyard robbery Photograph: (police)

திண்டிவனத்தில் மயானக்கொள்ளை திருவிழாவின் போது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நின்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்  அங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அங்காளம்மன் திருக்கோயில் மயானக்கொள்ளை திருவிழா என்பது ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. கடந்த முறை பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் அருகே மயானக்கொள்ளை ஊர்வலம் நடந்த போது விசிக பாமக இடையே கட்சி கொடி காட்டுவதில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த முறை கட்சிக்கொடியை பயன்படுத்த போலீசார் தடை விதித்தனர். அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸின் இல்லத்திற்கு அருகே நடனமாடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் ராமதாஸ் இல்லத்திற்கு வந்த மயானக் கொள்ளை ஊர்வலத்தில் ராமதாஸ் இல்லம் முன்பு பாமக நிர்வாகிகள் சிலர் கட்டாயப்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால் போலீசார் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவர்களை தடுத்து அங்கிருந்து நகர அறிவுறுத்தினர். ஆனால் போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த போலீசார் பாமக நிர்வாகிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் மீது தடியடி நடத்தினர்.  இந்த கூட்டத்திற்குள் மாணவ மாணவிகளும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

DR.RAMADOSS police thindivanam villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe