Advertisment

சில மணி நேரத்தில் உருவாகிறது 'மோன்தா' புயல்

a5622

Cyclone 'Montha' to form in a few hours Photograph: (strom)

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறினால் அதற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா (Montha) என்று பெயரிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் மோன்தா புயல் உருவாகவுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது அதன் வேகம் 8 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து 720 கிலோமீட்டர் தொலைவில் தற்பொழுது அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

HEAVY RAIN FALL strome weather
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe