தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா (Montha) என்று பெயரிடப்பட்டது. தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று (27.10.2025) அதிகாலை 02:30 மணியளவில் மோன்தா புயல் உருவானது.

Advertisment

இன்று மாலை அல்லது இரவு தீவிரப் புயலாக மசூலிப்பட்டினம்-கலங்கப்பட்டினம் இடையே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. மசூலிப்பட்டினத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல் அடுத்த மூன்று முதல் நான்கு மணி நேரத்தில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 110 கிலோமீட்டர் வரை காற்று வீசக் கூடும் இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment