Advertisment

கரையைக் கடந்த மோன்தா புயல்; வானிலை மையம் முக்கிய தகவல்!

cyclone-model-1

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா (Montha) என்று பெயரிடப்பட்டது. தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று முன்தினம் (27.10.2025) அதிகாலை 02:30 மணியளவில் மோன்தா புயல் உருவானது.

Advertisment

இதனையடுத்து இந்த புயல் நேற்று (28.10.2025) மாலை அல்லது இரவு தீவிரப் புயலாக மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே  கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டட்து.  இருப்பினும் சற்று தாமமாக மசூலிப்பட்டினத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த  புயல் அடுத்த மூன்று முதல் நான்கு மணி நேரத்தில் கரையைக் கடக்க தொடங்கியது. அப் போது அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 110 கிலோமீட்டர் வரை காற்று வீசக் கூடும் இடம் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு பகுதியான காக்கி நாடா பகுதியைச் சுற்றி உள்ள பகுதிகளில் மோந்தா தீவிர புயல் கரையைக் கடந்தது. முன்னதாக மோண்தா புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வடக்குவடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக வலுவிழந்தது. இத்தகைய சூழலில் தான் மோன்தா புயல் இன்று (29.10.2025) அதிகாலை 02:30 மணி நிலவரப்படி, மச்சூலிப்பட்டினத்திற்கு வடகிழக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடவில் இருந்து, மேற்கு தென்மேற்கே 90 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தென்மேற்கே 230 கி.மீ. தொலைவிலும், கோபால்பூரிலிருந்து தென்மேற்கே 470 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது கடலோர ஆந்திரப் பிரதேசத்தின் குறுக்கே வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து அதற்கடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், மேலும் வலுவிழந்தது அடுத்த 6 மணி நேரத்தில் இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த 6 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாகவும் மோந்தா புயல் தீவிரத் தன்மையைத் தொடர்ந்து இழக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Andhra Pradesh cyclone Indian Meteorological Department Cyclone Montha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe