Advertisment

‘டிட்வா’ புயல் : வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

29-11.25-cyclone-ditwah

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இந்த புயல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடற்கரை வழியாக வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நாளை (30.11.2025)  அதிகாலையில், வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், காவிரிப்படுகை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisment

அதிலும் குறிப்பாக, ஒரு சில இடங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தமிழகத்திற்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த புயல் வலுவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (29.11.2025) காலை 08.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “இந்திய நேரப்படி இன்று அதிகாலை 05:30 மணி நிலவரத்தின் அடிப்படையிலான வானிலை அறிக்கையைப் பொறுத்த வரையில் கடலோர இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த, ‘டிட்வா [Ditwah]’ புயல், கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. 

Advertisment

இன்று (29. 11. 2025) அதிகாலை 05:30 மணி நிலவரப்படி, இது தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு இலங்கை கடற்பகுதியின், (வடக்கு அட்சரேகை 9.4°N மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 80.7°E) அருகே மையம் கொண்டிருந்தது. இது இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 80 கி.மீ தொலைவிலும், திருகோணமலையிலிருந்து வடக்கு - வடமேற்கே 110 கி.மீ தொலைவிலும், இந்தியாவின் காரைக்காலில் இருந்து தெற்கு - தென்கிழக்கே 190 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு - தென்கிழக்கே 300 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 400 கி.மீ தொலைவிலும் உள்ளது. 

chennai-rmc

இந்தப் புயல் தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை வேளையில் வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளை நெருங்க வாய்ப்புள்ளது. எனவே தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு இலங்கை கடற்பகுதியில்  ‘டிட்வா [Ditwah]’ புயல், வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை (ஆரஞ்சு அலர்ட்)  விடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

orange alert heavy rain rain weather Indian Meteorological Department Sri Lanka bay of bengal cyclone cyclone ditwah
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe