Advertisment

‘டிட்வா’ புயல் : சென்னைக்கு தெற்கே 250 கி.மீ. தொலைவில் மையம்!

30-11.2025-ditwah-cyclone

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், காவிரிப்படுகை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (30.11.2025) அதிகாலை 05.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரையை ஒட்டியுள்ள திட்வா புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் வடக்கு திசை நோக்கி நகர்ந்து, இன்று (30.11.2025) அதிகாலை இந்திய நேரப்படி 02.30 மணிக்கு அதே பகுதிக்கு, (அட்சரேகை 10.8°N மற்றும் தீர்க்கரேகை 80.6°E க்கு) அருகில் நிலை கொண்டுள்ளது. 

Advertisment

இது காரைக்காலில் இருந்து கிழக்கே சுமார் 80 கி.மீ தொலைவிலும், வேதாரண்யத்தில் இருந்து கிழக்கு - வடகிழக்கே 100 கி.மீ தொலைவிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கு - வடகிழக்கே 140 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு - தென்கிழக்கே 160 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 250 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக வடக்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளது. வடக்கு நோக்கி நகரும்போது, இன்று அதிகாலை மற்றும் மாலைக்குள், புயல் தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையில் இருந்து குறைந்தபட்சம் 50 கி.மீ மற்றும் 25 கி.மீ தொலைவிற்குள் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

heavy rain Chennai bay of bengal cyclone ditwah weather rain
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe