கடலூரில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்த ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் அருண்ராஜ் (34) என்பவர் சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து உள்ளே சென்று சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இது குறித்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

Advertisment

சம்பவம் உண்மை என விசாரணையில் தெரிய வர, இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர் மீது ஒரத்தூர் காவல் நிலையத்தில் சரித்திர குற்றப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.அதே காவல் நிலையத்தில் 2 வழக்கும், சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் ஒரு வழக்கு மொத்தம் என 3 வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை ஒரு ஆண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டார். அதன் பேரில் அருண்ராஜ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.