Cuddalore Congress factional conflict - counter-protest Photograph: (cuddalore)
கடலூர் மாவட்ட காங்., கட்சியில் தெற்கு, மேற்கு, கிழக்கு என 3 மாவட்ட செயலாளர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நியமனம் செய்யப்பட்டனர். இதில், ஒருவர் கூட பட்டியல் சமூகத்தினரை நியமிக்கவில்லை என, மாநில காங்., நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், சிதம்பரத்தை சேர்ந்த, காங்.,முன்னாள் மாநில துணை தலைவர் செந்தில்குமார் தலைமையில், உண்ணாவிரதம் அறிவித்தனர்.
காவல்துறை அனுமதி வழங்காததை அடுத்து, செவ்வாய் கிழமை சிதம்பரம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், கடலுார் மாவட்டத்தில், தலித் ஒருவர் கூட மாவட்ட தலைவராக நியமிக்க படாததை கண்டித்து பேசப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு செந்தில்குமார் தலைமை தாங்கினார். காங், விவசாய பிரிவு வினோபா, மாநில எஸ்.சி.எஸ்.டி., பிரிவு துணை தலைவர் சித்தார்த்தன், முன்னாள் மாவட்ட நிர்வாகி மணியரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், அந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அகில இந்திய காங்., தலைவர்களால் நியமனம் செய்யப்பட்டவர்களை கண்டித்து, உண்ணாவிதரம் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை, கட்சியை விட்டு நீக்க வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிதம்பரம் நகர காங்., சார்பில் உண்ணும் போராட்டம் அறிவித்து, அதே நாளில் சிதம்பரம் கஞ்சித்தொட்டியில். மற்றொரு பிரிவினர் உண்ணும் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு ,வட்டார தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். நகர தலைவர் பகத்சிங் வரவேற்றார். மாவட்ட முன்னாள் இளைஞர் அணி தலைவர் அன்பரசன், மாவட்ட மகளிர் அணி தலைவி அஞ்சம்மா, நகர செயலாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர். நகர தலைவர் மக்கின், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா, மாவட்ட துணை தலைவர் ராஜா சம்பத்குமார் பங்கேற்று பேசினர்.
கடலூர் தெற்கு மாவட்ட தலைவராக சித்தார்த்தனை அகில இந்திய காங்., நியமித்தது. தமிழக காங்., கட்சியில், 77 மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில், 17 பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டு காலமாக கட்சி கூட்டம், போராட்டங்களில் ஈடுபடாமல், கட்சிக்கு விரோதமாக கட்சியின் நடவடிக்கைக்கு எதிராக செந்தில்குமார் மற்றும் அவரை சார்ந்தவர்களையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ராதா விஜயகுமார் நன்றி கூறினார். சிதம்பரத்தில் காங்., கட்சியினர் எதிர் எதிர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கோஷ்டி பூசலாக மாறியுள்ளது.
Follow Us