திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிஆர்பிஎஃப் வீரர் மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஆவடி அருகே பள்ளியில் 8 எட்டாம் வகுப்பு பயின்று வந்த சிறுமி ஒருவருக்கு சிஆர்பிஎஃப் வீரர் சுரேஷ் குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. சிறுமி தற்காப்புக் கலை பயின்றவர் என்பதால் பாலியல் தொல்லை கொடுத்த வீரர் மீது தாக்குதல்நடத்தி அவருடைய முகத்தில் கீறல் விழச் செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து சிஆர்பிஎஃப் அலுவலகத்தில் புகார் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்காததால் சிறுமியின் பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமி கண்ணீர் மல்க நடந்ததை தெரிவித்துள்ளார்.

புகார் அடிப்படையில் சிஆர்பிஎஃப் வீரர் சுரேஷ்குமாரை ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவிக்கு ஆர்பிஎஃப் வீரர் பாலியல் தொல்லை கொடுத்து கைதான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.