Advertisment

கூட்ட நெரிசல் வழக்கு : அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்புக் குழு கரூர் வருகை!

cbi-ajay-rasthogi

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி (13.10.2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Advertisment

மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான கரூர் சுற்றலா மாளிகையில் தற்காலிகமாகச் சிபி.ஐ.யின் விசாரணை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் 12 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் கரூரில் தங்கி இந்த வழக்கைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Advertisment

அந்த வகையில் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி முதல் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள், காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்த உறவினர்கள் என இதுவரை 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருந்தனர். இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற  நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்புக் குழு கரூர் வருகை தந்துள்ளது. இந்த  சம்பவம் தொடர்பான விசாரணையை இந்த குழுவினர் கண்காணித்து அது தொடர்பான ஆலோசனையையும், அறிவுரையையும் வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

Tamilaga Vettri Kazhagam CBI investigation Retired Judge karur stampede karur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe