Crowd thronged to see the Chief Minister - scuffle between volunteers and police Photograph: (THENKASI)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாகத் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (28.10.2025) இரவு திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் தங்கினார். அதன் பின்னர் இன்று (29.10.2025) காலை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னர் தென்காசி மாவட்டத்தின் சார்பில் ஆலங்குளத்தில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் தங்கியுள்ளார். இந்நிலையில் அந்த விடுதி முன்பாக திமுகவினரும், கட்சி நிர்வாகிகளும் அதிகப்படியாக குவிந்துள்ளனர். முதல்வரை பார்க்க வேண்டும் என அனைவரும் ஆர்ப்பரித்ததால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தடையை மீறி உள்ளே செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினருக்கும் கூடியிருந்த தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் உள்ளே நுழைய முயன்றதில் சிலர் கீழே விழுந்து காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow Us