அண்மையில் கடந்த 29 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, கிருஷ்ணன் கோவில், சாத்தூர் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் இடையே அச்சம் நிலவியது. உடனே வீட்டில் இருந்து வெளியேறிய மக்கள் தெரு முனைகளில் கூடினர். நில அதிர்வு என்ற செய்திகள் வெளியாகி சிறிய பதற்றத்தை ஏற்படுத்தியது.
கிருஷ்ணன் கோவில், செங்குளம், பட்டாக்குளம், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்ட நில அதிர்வு 3.0 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டிருந்ததும் பரபரப்பை கூட்டி இருந்தது. விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகம் பட்டாசு ஆலைகள் அதிகம் என்ற நிலையில் பாட்டாசு ஆலைகளால் ஏற்பட்ட நில அதிர்வா என்ற பேச்சு மக்களிடையே இருந்தது. ஆனால் நில அதிர்வுக்கு காரணம் பட்டாசு ஆலைகள் காரணம் அல்ல என விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, இந்த சூழலில் புகாரின் பேரில் போலீசார் நடத்திய ஆய்வில் கோழிப்பண்ணையில் வைத்து பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டது தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் கருப்பசாமி, மகேஸ்வரன் ஆகிய இருவர் சட்டவிரோதமாக கோழிப்பண்ணையில் வைத்து பட்டாசு ஆலை நடத்துவதாக புகார் எழுந்தது. உடனே அங்கு சென்ற போலீசார் ஆய்வு செய்ததில் அங்கு பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கிடைத்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/02/248-2026-02-02-19-55-16.jpg)