Advertisment

“ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது” - பெ. சண்முகம்!

cpim-shanmugam-pm

கோப்புப்படம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. 

Advertisment

அதேபோல் விஜய்யின் த.வெ.க.கவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இனைந்தது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் வரும் மார்ச் மாதம் 01ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதற்கு முன்னதாக கூட்டணி இறுதி செய்வது, அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்கான முயற்சிகளை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.

Advertisment

அந்த வகையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை மறைமுகமாக நடைபெற்று வந்த இந்த ஆலோசனைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வகையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நாளை (26.02.2026) சென்னை வருகை தர உள்ளார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், கருத்துப்படத்துடன் (cartoon) எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் என்று எடப்பாடி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள். 

cpim-shanmugam-cartoon

இதை பாஜகவும் மறுக்கவில்லை. போற போக்கை பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது. மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது” எனத் தெரிவித்துள்ளார். 

Alliance Assembly Election 2026 b.j.p admk p shanmugam CPI(M)
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe