குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி (21.07.2025) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார். இதன் காரணமாக இந்திய துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 09.09.2025 அன்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி ஆகியோர் போட்டியிட்டனர்.

Advertisment

வாக்குப்பதிவைத் தொடர்ந்து அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில்  சி.பி. ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றார். வெற்றிக்கு 358 வாக்குகள் தேவைப்படும் நிலையில், சி.பி.ராதா கிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்றார் . இதன் மூலம் இந்தியாவின் 15 வது குடியரசு துணைத் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் நாட்டின் 15வது துணை குடியரசுத் தலைவராக இன்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளார். இதற்கான நிகழ்ச்சி டெல்லியில் தற்போது தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணைக் குடியரசு ஜெகதீப் தன்கர், பாஜகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து முறைப்படி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்ளவில்லை