Advertisment

“மரியாதை நிமித்தமான சந்திப்பு.... ” - டெல்லியில் நயினார் நாகேந்திரன் பேட்டி!

nainar-pm-dl

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் பிற கட்சிகள் என அனைத்துக் கட்சிகளும் மிகத் தீவிரமாக தேர்தல் பணிகளில் களமாடி வருகின்றன. அதோடு நாங்கள் இருக்கும் கூட்டணி தான் வெல்லும், தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என ஒவ்வொரு கட்சிகளும் போட்டி போட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக  உள்ளிட்ட தேசிய கட்சிகளின் மாநில தலைவர்களும் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு தத்தம் தலைமைகளிடம் தேர்தல் குறித்தான உத்திகளையும், அவற்றை கையாளும் முறைகள் குறித்தும் ஆலோசித்து வருகின்றன. 

Advertisment

இந்த நிலையில், டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, "பெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு இளைஞரை (நிதின் நபீன்) பாஜகவின் தேசிய செயல் தலைவராக கட்சி நியமித்துள்ளது. அவருக்கு என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்" என புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பாஜகவின் செயல் தலைவர் குறித்து பேசினார். மேலும் அமித்ஷா அவர்களை சந்தித்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே ஆகும். அங்கு அரசியல் குறித்து வேறு எதுவும் பேசவில்லை எனவும் கூறினார். 

Advertisment

மேலும், அவருடைய தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தின் இறுதி நாளன்று அமித்ஷா அல்லது மோடி இவர்களில் யாரேனும் ஒருவர் வரவேண்டுமென கேட்டுக்கொண்டதாகவும், அவர்களில் யாரேனும் ஒருவர் நிச்சயம் வருவார்கள் எனவும் அவர் கூறினார். இறுதியாக  கூட்டணி குறித்து பேசுகையில், அதிமுகவுடன் தான் கூட்டணி எனவும் இன்னும் தேர்தலுக்கு நாட்கள் இருக்கும் நிலையில் பல்வேறு காட்சிகள் வர வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

Amit shah Assembly Election 2026 Delhi nainar nagendran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe