Court verdict in Ambur riot case today Photograph: (police)
ஆம்பூர் கலவர வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த கலவர வழக்கில் இன்று முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு பவித்ரா என்பவர் காணாமல் போன சம்பவத்தில் ஷமீல் அகமது என்பவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் வீடு திரும்பிய அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
ஷமீல் அகமது உயிரிழப்புக்கு காவல் துறையே காரணம் என அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் பொழுது திடீரென கலவரம் வெடித்தது. இதில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 71 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட காவல் வாகனங்களும் சேதமடைந்தது. ஆம்பூர் கலவரம் என்று சொல்லப்படும் இந்த சம்பவத்தில் 25 லட்சம் மதிப்புடைய அரசு சொத்துக்கள் சேதமாகின. இந்த சம்பவம் தொடர்பாக 191 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையானது நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.