தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரரை கிண்டல் செய்ததால் சக நண்பனையே இளைஞர் அடித்துக் கொன்ற சம்பவத்தில் கொலை செய்து செய்யப்பட்ட  இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார். அவருடைய நண்பர் ரோகித் சர்மாவின் ரசிகராக இருந்து வந்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருந்த சமயத்தில் இருவருக்கும் இடையே அவர்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் பற்றிய பேச்சு எழுந்தது. அப்பொழுது விராட் கோலியை சக நண்பன் கிண்டல் செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தர்மராஜ் மது அருந்துவதற்காகக் கூட்டிச் சென்று கொலை செய்ததாகக் கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தர்மராஜ் மீதான கொலை வழக்கு அரியலூர் நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்த நிலையில் கொலையில் ஈடுபட்ட தர்மராஜுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.