court orders Sadan Hussein's military officer sentenced
சதாம் உசேன் ஈராக் நாட்டினை மிக நீண்ட காலமாக ஆட்சி செய்த அதிபர் ஆவார். பாத் கட்சியின் முக்கிய தலைவரான இவர், 1968 ம் ஆண்டு ஈராக்கின் துணை அதிபராகப் பதவியேற்றார். பின்னர், அந்நாட்டின் அதிபராக மாறினார். அதாவது, கடந்த 1979ம் ஆண்டு முதல் 2005 வரையிலான காலகட்டங்களில் ஈராக் நாட்டின் அதிபராகப் பதவி வகித்தார். பின்னர், அவர் 2006 ஆண்டு டிசம்பர் மதம் 30 ம் நாள் மனித உரிமை மீறல் விவகாரத்தில் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை பெற்றார்.
இந்த நிலையில், அவரது ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புப் படை அதிகாரியாக இருந்தா சபரி அல் கைசி என்பவர் தனது பதவிக்காலத்தில் பல முக்கிய கொலைக் குற்றங்களுக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக, கடந்த 1980 ம் ஆண்டு ஷியா பிரிவின் முக்கிய மதகுருவான முகமது பகிர் அல் சதர் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலைகளில் கைசிக்கும் தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஈராக் பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், கைசி மனித நேயத்திற்கு எதிரான கொடுங்குற்றங்களை செய்துள்ளதாக அறிவித்து மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற உத்தரவையடுத்து, கைசி தூக்கிலிடப்பட்டதாக ஈராக் நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Follow Us