Advertisment

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

thiruvallur-child-judgement

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி (12.07.2025) பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி வடமாநில இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்த இளைஞர் 14 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். ராஜூ பிஸ்வ கர்மா என்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நபரிடம் நடத்தப்பட்ட  விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. 

Advertisment

அதோடு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பாக அந்த வழியாக வந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில் அந்த இளைஞரை அப்பெண் கண்டித்து விரட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து அங்குப் பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை பிஸ்வ கர்மா பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் தான் தங்கியிருந்த தாபா ஹோட்டல் கடையில் இருந்து செல்போனை சரி செய்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில் பிஸ்வ கர்மாவை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து  திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பெயரில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ராஜு பிஸ்வ கர்மா மீது குண்டர் சட்டம்  பாய்ந்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையானது திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை அரசு தரப்பு வழக்கறிஞர் விஜயலட்சுமி, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. ஜெயஸ்ரீ ஆகியோர் நடத்தி வந்தனர். 

tvlr-girl-child-cuprit

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பானது இன்று (24.12.2025) வெளியாகியுள்ளது. அதில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ராஜு பிஸ்வ கர்மாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனையானது வழங்கப்பட்டுள்ளது. அதோடு ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கைச் சிறப்பாக நடத்திய காவல்துறையினருக்கும், அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா நன்றி தெரிவித்துப் பாராட்டியுள்ளார். இந்த தீர்ப்பையொட்டி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

court girl child judgement posco thiruvallur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe