கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் பிருந்தா. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திலக் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே காதலாகவும் மாறியிருக்கிறது. ஆனால், திலக் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பெண்ணின் வீட்டினர் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பிருந்தா மற்றும் திலக் இருவருக்கும் மார்க்ஸிஸ்ட் கட்சியினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரும் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து, காதல் ஜோடி திருமணம் முடித்த கையோடு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்களுக்கு பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளனர்.