உத்திரபிரதேச மாநிலத்தில் தமிழகத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனத்தின் இருமல் மருந்தில் கலப்படம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 'கோல்ட்ரிஃப்' என்னும் இருமல் மருந்தை குடித்த இருபது குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தின் எதிரொலியாக தமிழக மருந்து கட்டுப்பாட்டுதுறைக்கு மத்திய பிரதேச சுகாதாரத்துறை தகவல் அனுப்பி இருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் ஃபார்மாசூட்டிகல் எனும் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் இது தொடர்பாக மருந்தாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/08/a5453-2025-10-08-18-50-34.jpg)
சோதனையில் விதிகளை மீறி எத்திலீன் கிளைக்கால் நச்சுப் பொருளுடன் இருமல் மருந்தில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசன் ஃபார்மாசூட்டிகல் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அதேபோல் 'கோல்ட்ரிஃப்' சிரப்பை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் 'கோல்ட்ரிஃப்' சிரப் விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.