Advertisment

கடற்கரையில் ஒதுங்கிய 4 பெண்களின் உடல்கள்; சென்னை அருகே பேரதிர்ச்சி!

police

Corpse of 4 women washed ashore Chennai ennore

சென்னை எண்ணூர் கடற்கரை பகுதியில் 4 பெண்களின் உடல்கள் ஒதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை பெரியகுப்பம் பகுதியில் உள்ள கடற்கரையில் 17 வயது கல்லூரி மாணவி உள்பட  4 பெண்கள் குளிக்க வந்துள்ளனர். அதில் ஒரு பெண், கடல் அலையில் சிக்கியுள்ளார். அப்போது அவரைக் காப்பாற்ற மூன்று பெண்களும் கடலில் இறங்கியுள்ளனர். ஆனால், எதிர்பாராதவிதமாக 4 பெண்களும் கடலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஒரே நேரத்தில் 4 பேரின் உடல்களும் கடற்கரையில் ஒதுங்கியதை அங்குள்ள மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர், சம்பவம் இடத்திற்கு சென்று 4 பேரின் உடல்களை உடனே மீட்டனர். அதனை தொடர்ந்து, அந்த உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதையடுத்து, இந்த நான்கு பேர் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? இவர்கள் எந்த கல்லூரியில் படிக்கிறார்கள்? வேலை செய்கிறார்கள்? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

corpse ennore Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe