Corporation imposes fine for manufacturing plastic without permission Photograph: (erode)
ஈரோட்டில் அரசு அனுமதி இல்லாமல் இயங்கி வந்த பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் முன்னிலையில் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு 5 டன் பிளாஸ்டிக் கேரிபேக்குகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நாராயண வலசு பகுதியில் குடோன் ஒன்றில் மிஷின்களை போட்டு அனுமதி இல்லாமல் கடந்த சில மாதங்களாக பிளாஸ்டிக் கேரி பேக் தயாரிக்கும் நிறுவனத்தை மறைமுக நடத்தி வந்துள்ளார். இது தொடர்பாக வடக்கு காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் வேல்முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்த பொழுது அனுமதி யின்றி பிளாஸ்டிக் கேரி பேக் நிறுவனம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் 5 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கேரி பேக்குகளை கைப்பற்றி நிறுவனத்திற்கு போலீசார் முன்னிலையில் மின் இணைப்பையும் துண்டித்தனர். மேலும் நிறுவனத்தை நடத்திய வந்த விஜயகுமாருக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
Follow Us