Advertisment

வன்கொடுமை செய்த காவலர்கள்: வேலியே பயிரை மேய்வது தான் திராவிட மாடல் ஆட்சியா?-அன்புமணி கண்டனம்

a5416

Cops who committed atrocities: Is the Dravidian model of governance just grazing the crops behind the fence? - Anbumani condemns Photograph: (pmk)

ஆந்திர மாநிலத்தில் இருந்து 29 ஆம் தேதி இரவு பழங்களை ஏற்றிக்கொண்டு டாடா ஏசி வாகனம் ஒன்று திருவண்ணாமலையை நோக்கி வந்துள்ளது. வாகனத்தில் ஓட்டுநருடன் இளம்பெண் மற்றும் அவரது சகோதரி என இரு பெண்கள் இருந்துள்ளனர். இந்த வாகனம் ஏந்தல் புறவழிச்சாலையில் வந்த போது, அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுரேஷ் மற்றும் சுந்தர் இருவரும் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

பின்னர் வாகனத்தை சோதனை செய்த இரு காவலர்களும், விசாரிக்க வேண்டும் என்று கூறி இரு பெண்களையும் தனியாக அழைத்து சென்றுள்ளனர். பின்னர் ஏந்தல் பகுதியில் உள்ள தோப்பில் வைத்து சகோதரியின் கண்முண்ணே இரு காவலர்களும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் காவலர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பேரில் காவலர்கள் சுரேஷ் ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரையும் கைது செய்து எஸ்.பி. சுதாகர் தலைமையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காவலர்களால் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திராவில் இருந்து வந்த இளம்பெண்களிடம் போலீசாரே அத்துமீறிய இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
இந்நிலையில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் அருகில் தாய் கண் எதிரிலேயே இளம்பெண்ணை இரு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை  எவருக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இன்னொரு வேதனையான எடுத்துக்காட்டு இது தான். சட்டம் - ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பை திமுக அரசு இந்த அளவுக்கு சிதைத்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
Advertisment
ஆந்திர மாநிலத்திலிருந்து திருவண்ணாமலை சந்தைக்கு வாழைத்தார் ஏற்றி வந்த சரக்குந்து ஓட்டுனர் ஒருவர், திருவண்ணாமலை கோவிலில் வழிபாடு செய்ய விரும்பிய  தமது சகோதரி மற்றும் சகோதரி மகளையும் உடன் அழைத்து வந்துள்ளார்.  திருவண்ணாமலைக்கு முன்பாக ஏந்தல் என்ற இடத்தில் சரக்குந்தை மறித்து சோதனை நடத்திய இரு காவலர்கள், அதில் இருந்த இரு பெண்களையும் வலுக்கட்டாயமாக இறக்கியுள்ளனர். சந்தைக்கு சென்று திரும்பும் போது அவர்களை அழைத்துச் செல்லும்படி சரக்குந்து ஓட்டுனரிடம் கூறியுள்ளனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக  ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற காவலர்கள், தாயின் கண் எதிரிலேயே 19 வயது மகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து விட்டு  தப்பி ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதற்கு இது தான் சான்று. காவலர்களின் கடமை பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பது தான். ஆனால், காவல்துறையைச் சேர்ந்தவர்களே  சரக்குந்தில் சென்ற இரு பெண்களை மிரட்டி, இறக்கி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள் என்றால் காவல்துறையும், சட்டம் - ஒழுங்கும் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். காவல்துறையை இந்த அளவுக்கு சீர்குலைத்ததற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த  பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 54% அதிகரித்து விட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதை சுட்டிக்காட்டி, நிலைமையை மேம்படுத்த தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டே வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதைப் பற்றியெல்லாம் திமுக அரசு கவலைப்படாமல் இருந்ததன் விளைவு தான் இந்த கொடுமை ஆகும்.
தமிழ்நாட்டில் வேலியே பயிரை மேயும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைத்திருப்பது தான்  திராவிட மாடல் அரசின் சாதனை ஆகும்.  சட்டம் - ஒழுங்கு சீர்குலைவில் இருந்து தமிழகத்தைக் காக்கவும்,  பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்ள ஒரே வழி  திமுக அரசை அகற்றுவது தான். அதை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் செய்து முடிக்கப் போவது உறுதி' எனத் தெரிவித்துள்ளார்.
police anbumani ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe